·   ·  148 posts
  •  ·  15 friends
  • S

    23 followers

உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகள்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். 

நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகி அதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் கலக்கின்றன. அப்போது இதில் இருக்கும் கொழுப்பு குடலில் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. உடல் உறுப்புகளுக்கு வேண்டிய போது கொழுப்பை வெளிவிடவும், உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் கல்லீரலே செயல்படுகின்றது.  

கொழுப்பு உடலில் இருக்கும் செல்களைச் சீராக செயல்புரிய வைக்கும் பணியை செய்கிறது. பித்தநீர்சுரக்க உதவி புரிவதோடு உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே போன்றவற்றை இரத்தத்தில் கலக்க செய்கிறது. மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் துணைபுரிகிறது. ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்புக்கு பயன்படுகிறது.

ஹெச்டிஎல் என்றழைக்கப்படும் நல்ல கொழுப்பு உடலில் இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதோடு கெட்ட கொழுப்புகள் படிவதையும் தடுக்கிறது. கெட்ட கொழுப்புகளை ஈர்த்து கல்லீரலுக்கு கடத்தி அங்கிருந்து அதை வெளியேற்றவும் துணைபுரிகிறது.

கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி,  உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர். இதனால் இதய நோயானது 30 வயதிலேயே வந்து விடுகிறது.

நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். 

 உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகள் -  உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

நட்ஸ்நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக்குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தைஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.பார்லி தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனைஉண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.மீன்மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால்உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு,கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.டீடீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளதுஎன்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ளகொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.ஓட்ஸ்ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம்.மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும்குறையும்.முழு தானியங்கள்முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள்எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.சிட்ரஸ் பழங்கள்சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தானபெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும்கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள்ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம்நிறைந்துள்ளது. எனவே தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்டகொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.பசலைக் கீரைபசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில்தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.சோயா பொருட்கள்சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.பூண்டுபூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில்நோயெதிர்ப்பு தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும்.அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

கத்திரிக்காய்கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம்.ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால்உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.வெண்டைக்காய்கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும்இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல்எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவுநோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

வெங்காயம்வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ளகொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால்குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மிளகாய்மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்டகொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை.அவகேடோஅவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இதுஉடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மைகொண்டது.

சாக்லெட்சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால்,இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து,தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

உங்கள் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவை உங்கள் மருத்துவரின் ஆலோ சனையின் பெயரில் தகுந்த பரிசோதனையில் அறிந்து கொள்ளுங்கள்.  ஆரோக்யமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். 

ஆய்வுகளில் உயரத்திற்கேற்ற எடை உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் சரியான அளவில் இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர். 

உயரம்எடை
சாதாரண எடைஅதிக எடைஉடல் பருமன்அதிக  உடல் பருமன்
4ft 10″(58″)91 to 115 lbs.119 to 138 lbs.143 to 186 lbs.191 to 258 lbs.
4ft 11″(59″)94 to 119 lbs.124 to 143 lbs.148 to 193 lbs.198 to 267 lbs.
5ft(60″)97 to 123 lbs.128 to 148 lbs.153 to 199 lbs.204 to 276 lbs.
5ft 1″(61″)100 to 127 lbs.132 to 153 lbs.158 to 206 lbs.211 to 285 lbs.
5ft 2″(62″)104 to 131 lbs.136 to 158 lbs.164 to 213 lbs.218 to 295 lbs.
5ft 3″(63″)107 to 135 lbs.141 to 163 lbs.169 to 220 lbs.225 to 304 lbs.
5ft 4″(64″)110 to 140 lbs.145 to 169 lbs.174 to 227 lbs.232 to 314 lbs.
5ft 5″(65″)114 to 144 lbs.150 to 174 lbs.180 to 234 lbs.240 to 324 lbs.
5ft 6″(66″)118 to 148 lbs.155 to 179 lbs.186 to 241 lbs.247 to 334 lbs.
5ft 7″(67″)121 to 153 lbs.159 to 185 lbs.191 to 249 lbs.255 to 344 lbs.
5ft 8″(68″)125 to 158 lbs.164 to 190 lbs.197 to 256 lbs.262 to 354 lbs.
5ft 9″(69″)128 to 162 lbs.169 to 196 lbs.203 to 263 lbs.270 to 365 lbs.
5ft 10″(70″)132 to 167 lbs.174 to 202 lbs.209 to 271 lbs.278 to 376 lbs.
  • 609
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்