Support Ads
Main Menu
 ·   · 234 posts
  •  · 2 friends
  •  · 3 followers

சொர்க்கம் ----

👉மெரினா பீச் போனால்

மிளகாய் பஜ்ஜி சொர்க்கம்...


👉Rayars Cafe போனால்

ரவா தோசை சொர்க்கம்...


👉ஏப்ரல் உச்சி வெயிலுக்கு

இளநீரே சொர்க்கம்...


👉December மாத குளிருக்கு

     Degree coffee சொர்க்கம் ...


👉திருமணமான புதிதில்

தினந்தோறும் சொர்க்கம்...


👉விளக்கு வைத்த பின்னால்

வெள்ளி நிலா சொர்க்கம்...


👉குலவும் காதல் ஜோடிக்கு

கும்மிருட்டே சொர்க்கம்...


👉உலவும் தென்றல் காற்று

உடலை வருட சொர்க்கம்...


👉படுத்தவுடன் தூக்கம்

பட்டென்று வந்தால் சொர்க்கம்...


👉மீந்து போன அடைமாவில்

மிருதுவான குனுக்கு சொர்க்கம்...


👉ஒருவாரமான தோசைமாவில்

ஊத்தப்பமே சொர்க்கம்..


 👉மார்கழி மாத குளிரில்

மணக்கும் வெண்பொங்கலசொர்க்கம்...


👉கார மிளகு தாளித்த பொங்கலுடன்

கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்..


👉பரங்கிக்காய் சாம்பாருக்கு  பீன்ஸ்

 பருப்புசிலி சொர்க்கம்...


👉கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச

கத்திரிக்காய் கறி சொர்க்கம்...


👉குடைமிளகாய் சாம்பாருக்கு

கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்...


👉உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும்

உருளை காரகறியே சொர்க்கம்...


👉வெந்திய குழம்பிற்கு

வெண்டைக்காய் கறி சொர்க்கம்...


👉சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு

சுட்ட அப்பளமே சொர்க்கம்....


👉பத்திய மிளகு குழம்பிற்கு

பருப்பு தொகையலே சொர்க்கம்...


👉மத்தியான தயிர் சாதத்திற்கு

மாவடு இருந்தால் சொர்க்கம்....


👉Fast ஆய் வளரும் குழந்தைக்கு

     Fast Foodஏ சொர்க்கம்..


👉Waste ஆய் போன food கூட

வீதியில் நிற்போருக்கு சொர்க்கம்....


👉பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு

பருப்பு சாதமே சொர்க்கம்....


👉அடைக்கு வெல்லத்தோடு

அவியல் இருந்தா சொர்க்கம்...


👉பசுமாடு உண்பதற்கு

பச்சைப் புல்லே சொர்க்கம்....


👉நாயாய் பிறந்து விட்டால்

நட்டநடு வீதியே சொர்க்கம்...


👉சாராயம் குடிப்பவனுக்கு தோதாய்

Side Dish இருந்தா சொர்க்கம்...


👉பரீட்சை எழுதும் மாணவர்க்கு

 பாஸ் மார்க்கே சொர்க்கம்....


👉ஆப்பம் பிட்டு தின்பவனுக்கு

ஆட்டுக்கால் பாயா சொர்க்கம்....


👉ஏப்பம் வந்தவுடன் சரிய

ஏசி ரூம் இருந்தா சொர்க்கம்...👉பாய்ப் போட்டு படுத்தவுடன்

 வாய் பிளந்து தூங்கினா சொர்க்கம்...


👉முதுமை வரும் போது

 முன் வழுக்கை சொர்க்கம்....


👉ஞானம் வரும் வேளை

 நரகம் கூட சொர்க்கம்....


👉பசியில் துடிப்பவனுக்கு

பழைய சோறே சொர்க்கம்..


👉நோயில் வீழ்ந்தவனுக்கு

நொய்க் கஞ்சியே சொர்க்கம்....


👉கோடை வெயிலுக்கு

குளிர்ந்த மோர் சொர்க்கம்...


👉வாடை காற்றுக்கு

வஞ்சியின் வெப்பம் சொர்க்கம்....


            👉நேசிக்க நெஞ்சமிருந்தால்

நினைவெல்லாம் சொர்க்கம்....


👉வாசிக்க புத்தகமிருந்தால்

வரிக்கு வரி சொர்க்கம்..


👉தள்ளாத வயதில் 

தாரத்தின் தாய்மடி சொர்க்கம்....


👉மரணம் வரும் நேரத்தில்

மரிப்பதே சொர்க்கம்...


👉இரவு படுக்க போகும் முன்

இரண்டு முத்தம் சொர்க்கம்...


👉தூங்கி எழவில்லை யென்றால்

தூக்கத்திலேயே சொர்க்கம்! சொர்க்கம்!!

0 0 0 0 0 0
  • 306
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
Ads
Latest Posts
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்
வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ
இன்றைய தினம் மிலாது நபி
இன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமா?https://www.youtube.com/watch?v=HFQRPPJfWyc
இறை பக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய
இது கதை அல்ல...... நிஜம்
இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.அக்ரஹாரத்தில் ஒவ
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.மாதந்தோறும் இருமுறை – வளர
Ads