·   ·  147 posts
  •  ·  15 friends
  • S

    23 followers

முல்லைத்தீவில் அதிகரித்து செல்லும் சிறுநீரக நோயாளர்கள்

இன்றைய அளவுக்கதிகமான இராசாயனப்பயன்பாடு  மனிதன் மீது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கையில் இவ்வாறான பாதிப்புக்களில் ஒன்றாக சிறுநீரக நோயின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த10 ஆண்டுகளாக இந்த நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச்செல்கின்றது.இது வரை இந்த நோய்க்கான காரணம் கண்டறியப்படாவிட்டாலும் அது தொடர்பானகஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நோய்க்கு பிரதானமான காரணம் குடிநீராக இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் அது இன்னமும் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படவில்லை என்று சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தண்ணீரில் உள்ள நுண்ணங்கிகளின் தாக்கம் அதிகரித்த விவசாய இராசாயனங்களின் பயன்பாடு உணவுப்பழக்க வழக்கங்களின் தாக்கங்களும் இதற்குக் காரணமாக அமைகின்றது என குறிப்பிடப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, மற்றும் வெலிஓயா ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு சிறுநீரகத்தினுடைய தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.முன்னர் இந்தப் பிரதேசங்களில் இவ்வாறான நோயின் பாதிப்பு இருந்திருக்கவில்லை ஆனால் தற்போது இந்த நோயினுடைய தாக்கம் மேலும் அதிகரித்துச்செல்கின்றதை அவதானிக்கமுடிகின்றது.மேற்படி இரண்டு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவிலும் கடந்த 2015 ம் முதல் கடந்த ஆண்டு வரையான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இதன் தாக்கம் அதிகரித்திருக்கின்றது.அதாவது. வெலிஓயா பிரதேசத்தில் 2015ம்ஆண்டில் 251 பேரும் 2016ம ;ஆண்டில் 353 பேரும், 2017ம் ஆண்டில் 425 பேரும், 2018மஆண்டில் 411 பேரும், இவ்வாறான நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதுபோல மல்லாவிப்பிரதேசத்தில் 2015ம்ஆண்டு 143 பேரும், 2016ம் ஆண்டில் 197 பேரும். 2017ம்ஆண்டில் 224 பேரும், 2018ம் ஆண்டில் 362 பேரும், இவ்வாறு பாதிப்புக்;குள்ளாகியிருக்கின்றனர்.மேற்படி நான்கு ஆண்டுகளில் இந்தத்தொகை அதிகரித்துள்ளதை அவதானிக்கமுடிகின்றது.இவ்வாறு வயது வேறுபாடுகளின்றி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதும், இதுவரை இன்றுவரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது.இப்பிரதேச மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ப்பாவனையில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.இதேவேளை இந்த நோய்ப்பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்னர் உரிய மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்ற மருந்துகளின் தாக்கமும் இவ்வாறான நோய்க்கு ஒரு காரணியாக அமையும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.எது எவ்வாறு இருப்பினும் மக்கள் மத்தியில் ஒரு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிக மிக அவசியமாகும்.இவ்வாறான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் எல்லோரிடத்திலும் உள்ளது.இன்று நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொவிட் -19 தைக் கூட கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான விழிப்புனர்வுகளும் பொறுப்புக்களும் மிகமிக அவசியமாகும்.முல்லைத்தீவு விவசாய மாவட்டமாக காணப்படுவதுடன், எண்பது வீதமான மக்கள் விவசாயத்தையே தமது முழுநேரத்தொழிலாக முன்னெடுத்து வருகின்றனர்.இந்த விவசாயத்தின் மூலம் அதிக இலாபத்தை எட்டவேண்டும் என்ற எண்ணம் பிரதான இலககாகக்காணப்படுகின்றதே தவிர நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யவேண்டும் சுகதேகிகளாக வாழ வேண்டும் என்ற எண்ணம் எவரிடமும் இல்லை.இது எதிர்காலத்தில் வேவ்வேறு நோய்த்தாக்கத்திற்கும் வழிவகுக்கலாம்ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் சேதனப்பசளைகளைப் பயன்படுத்தி விவசாயத்தை முன்னெடுத்த அதேநேரம் உரிய விளைசசலையும் நல்ல தேக ஆரோக்கத்தியத்தினையும் யானை அடக்கும் பலம் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் என சொல்லப்படுகின்றது.இதற்கு நிறைய ஆதாரங்கள் என்பதை விட, எங்கள் மூதாதையர்;கள் மூலமும் அறிந்திருக்கின்றோம்.இப்போது விவசாயத்தில் நவீன வளர்ச்சி கண்டாலும் இவ்வாறான நோய்த்தாக்கங்கள் போசாக்கு குறைபாடுகள் கண்பார்வையற்றுப்போதல் எனப்பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன.இதற்கு முழுக்க முழுக்க மனிதனின் செயற்பாடுகளே காரணமாக அமைகின்றது. தற்போது சேதனப்பசளைகளினுடைய பயன்பாட்டினை அதிகரித்தல், அளவுக்கதிகமான இராசயங்கள் நாசினிகளை பாவிப்பதைக்குறைத்தல், போன்றவற்றில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதனைஎவரும் ஏற்றுக் கொள்ளத்தயார இல்லை.இராயசனப் பயன்பாடு எதிர்காலத்தில் நிலக்கீழ்; நீரை மேலும் மாசுபடுத்தும் என்பது நிதர்சனமாகும்.முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறு நீரக நோய்த்தாக்கத்தின் தேவைகருதியும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் கடந்த 2015ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக மல்லாவிப்பிரதேசத்திலும் வெலிஓயாப்பிரதேசத்திலும் இரண்டு சிறுநீரக வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன.ஆனால் இதுவரை அதற்கான போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லைசிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்புக்கள் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை மற்றும் செட்டிகுளம் வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தற்போதைய கொவிட காலத்தில் இந்த சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைகள் இடர்பாடுகள் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக குறிப்பிட்ட சிலருக்கு வாரத்தில் மூன்று நாட்கள் கூட இரத்த சுத்திகரிப்பு முன்னைடுக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறானவர்கள் அதிக போக்கு வரத்து செலவுகள் சிரமங்களை எதிர் கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது.ஆனாலும் இன்றைய சூழலில் அதிக நோய்த் தொற்று ஏற்படக் கூடியவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.இந்த நிலையில் மேலும் பல வைத்தியசாலைகளை அமைக்கவேண்டும். இருக்கும் வைத்தியசாலைகளை மேம்படுத்தவேண்டும் என்று அரசியல்வாதிகள் மக்கள்பிரதிநிதிகள் கோரிக்கை விடுகின்றனர்.இதற்கான வைத்தியசாலைகளை நிறுவுவதோ மேலும் வைத்திய வசதிகளை அதிகரிப்பதோ எதிர்காலத்தில் இதற்கான தீர்வாக அமையாது.மாறாக இராசாயனப்பயன்பாட்டைக்குறைத்தல், நஞ்சற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ளுதல், நிலக்கீழ் நீரைப்பாதுகாத்து சுத்தமான குடிநீரைப்பெறுவதற்கு வழிசெய்தல் பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்களை கையாளுதல் என்பனவே இதற்குச் சிறந்த ஒரு தீர்வாக அமையும்; என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.(சு.பாஸ்கரன்)

  • 449
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்