Support Ads
Main Menu
 ·   · 208 posts
  •  · 2 friends
  •  · 2 followers

அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயில்

* சிவபெருமானின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவரானவர் காரைக்கால் அம்மையார்.


* மாம்பழத்தை வைத்து சிவபெருமான் நடத்திய லீலைகள் இரண்டு.

அதில் ஒன்று நாரதரை பயன்படுத்தி ஞானமான மாம்பழத்தை வைத்து முருகனுடன் நடத்திய லீலை. இன்னொன்று அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்காலம்மையார் உடன் நடத்திய லீலை .


* இன்றைய புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர் காரைக்காலம்மையார் அவரது இயற்பெயர் புனிதவதியார் நினைவு தெரிந்த நாளிலிருந்தே புனிதவதியார் சிவன் மீது பக்தி பூண்டு வழிபாடு நடத்தி வந்தார். 


* அவரது பெற்றோர்கள் உரிய காலத்தில் நாகப்பட்டினத்தில் வசித்துவந்த பரமதத்தர் என்ற வணிகருக்கு மண முடித்துக் கொடுத்தனர் காரைக்காலிலேயே இருந்து குடும்பம் நடத்தி வந்தனர்.


* ஒருநாள் பரமதத்தன் கடைக்கு வந்த வியாபாரி ஒருவர் தன் தோட்டத்தில் கனிந்த மாம்பழங்களில் இரண்டை பரமதத்தனுக்கு வழங்கி விட்டுச் சென்றார்.


* அவைகளை ஒருவர் மூலம் வீட்டிற்கு அனுப்பினார். அப்போது பிச்சை கேட்டு வந்த ஒரு சிவனடியாருக்கு ஒரு மாம்பழத்தை வழங்கி விட்டார் அம்மையார்.


* உணவு நேரத்திற்கு வீடு வந்தான் பரமதத்தன் அவனுக்கு உணவோடு மீதமிருந்த ஒரு மாம்பழத்தையும் பரிமாறினார் புனிதவதியார்.  அதன் ருசியால் கவரப்பட்டு மற்றொரு கனியையும் கணவன் கேட்க புனிதவதியார் திடுக்கிட்டுப் போனார்.


* பிரியமுடன் கேட்கும் கணவனுக்கு அது இல்லையென எப்படி சொல்வது என்று புரியாமல் உள்ளே சென்று என்ன செய்வேன் இறைவா என்று கை பிசைந்து நின்றபோது அவரது கையில் புதிதாய் ஒரு மாம்பழம் வந்து சேர்ந்தது.


* அந்த மாம்பழத்தை கொண்டு சென்று வழங்கினார். அதை சுவைத்த அவன் மேலும் அதீத சுவையுடன் இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டார் . ஒரு மரத்து கனிகளில் இருவேறு சுவை வருமோ என நினைத்தான் .


* நான் அனுப்பிய மாம்பழத்தில் இருவேறு சுவை இருக்கிறதே எப்படி என்றான். பொய் சொல்ல மனமில்லாத புனிதவதியார் நடந்த உண்மைகளை நயம்படக் கூறினார்.

அதனை நம்ப மறுத்து பரமதத்தன் இரண்டாவது மாம்பழம் ஈசன் அருளால் கிடைத்தா? அப்படியானால் இன்னொரு மாம்பழத்தை கொண்டு கொண்டு வா பார்க்கலாம் என்றான்.


* ஆடிப்போன அம்மையார் இதுவும் அவன் விளையாட்டு என்று கருதி சிவபெருமானை தியானித்தார். அவரது கையில் வந்து விழுந்தது இன்னொரு மாம்பழம் . அதனை கொண்டு வந்து கணவன் கையில் கொடுக்கவே அவன் அதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த மாம்பழம் திடீரென மாயமாய் மறைந்து போனது.


* பரமதத்தன் தனது மனைவி ஒரு மாய பெண்ணோ? அல்லது தெய்வாம்சம் மிக்கவளோ? என்று எண்ணினான். இப்படிப்பட்டவளுடன் வாழ்வது சாத்தியம் தானா என சிந்தித்தான்.


* வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு மதுரை சென்று அங்கு வேறு பெண்ணை மணந்து கொண்டு வாழ்ந்ததுடன் ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையாகி இருந்தான்.

அந்த குழந்தைக்கு புனிதவதி என்றும் பெயர் சூட்டி இருந்தான். 


* அங்கு சென்ற புனிதவதியாரைக் கண்டதும், அவன் குடும்பத்தோடு காலில் விழுந்து ஆசி வேண்டினான்.

கணவன் காலில் விழுவதை கண்டு கலங்கிய அம்மையார். ஈசனை வேண்டி இளமை பொங்கும் அழகு திருவுரும் நீங்கப்பெற்று பேய் உருவை அளிக்குமாறு வழிபாடு நடத்தினார்.


* அழகு திருஉரு நீங்கி எலும்புக் கூடாய் பேய் வடிவம் பெற்றார். ஈசனின் அருளுக்கு இலக்கான அம்மையார் அப்பொழுதிலிருந்து ஈசன் அருளால் பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றதுடன், அம்மையார் பாடிய பாடல்கள் மூத்த திருப்பதிகம் என்றும் போற்றப்படுகின்றன.அம்மையார் அருளிச் செய்த அற்புதத் திருவந்தாதியும் திரு இரட்டை மணிமாலையும் ஈசனின் அருள் கோலங்களை அழகுற விளக்குமாறு அமைந்துள்ளன.


* புனிதவதியார் சிவனை தரிசிக்க அவன் உறைவதாக கூறப்படும் கைலாய மலை நோக்கிச் சென்றார். எல்லோரும் காலால் நடந்து செல்லும் மலைக்கு அம்மையார் தலையால் நடந்து சென்றார்.


* அம்மையாருக்கு காட்சியளித்த ஈசன்

அம்மையே நீ வேண்டும் வரம் யாது எனக் கேட்டார் அதற்கு காரைக்காலம்மையார் ‘ஈசனே உன்னிடம் என்றும் நீங்காத இன்ப அன்பு வேண்டும். மற்றும் பிறவாமை வேண்டும் என்றார்.


* சிவபெருமான் திருவாலங்காட்டில் நானாடும் நடனத்தை கண்டு எப்பொழுதும் என் திருவடிக்கீழ் பாடிக்கொண்டு இருப்பாயாக’ என்று அருளிச் செய்தார்.


* இந்த திருவாலங்காடு திருத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ளது.


* திருவாலங்காடு காரைக்கால் அம்மையாருக்கு முக்தி திருத்தலம் என்றால், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் அம்மையார் பிறந்து வளர்ந்த வாழ்ந்த தலமாகும்.


* காரைக்காலில் அம்மையாருக்கு என தனி ஆலயமும் அமைந்துள்ளது . சிவாலயம் முறைப்படி இங்கு பூஜை சம்பிரதாயங்களும் நடைபெறுகின்றன.


* புனிதவதியாருடன் சிவன் நிகழ்த்திய மாம்பழ லீலைகளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் மாங்கனித் திருவிழா காரைக்காலில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 


பக்தியில் சிறந்து இந்த அம்மையாரை வணங்கி நாமும் அவர் போல வாழ ஆசி பெறுவோம்.

0 0 0 0 0 0
  • 318
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
Ads
Latest Posts
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
 இந்து கடவுள்களின் அற்புதங்கள்
1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட
கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி
ஆடி வெள்ளியன்று  விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆ
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு?
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாராவது யோசித்துள்ளோமா?உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலை
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த   பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும்  சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
திருவண்ணாமலை கிரிவலம்  தோன்றியது எப்படி?
முதன்முதலில் கிரிவலம் சென்றது யார்??  இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி
Ads