Support Ads
Main Menu
 ·   · 119 posts
  •  · 13 friends
  •  · 13 followers

அன்றாடம் விறகு வெட்டி அதை விற்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்வைக்கொண்டு நடாத்தும் ஒரு ஏழைக் குடும்பத்தின் குமுறல்.

கஸ்ரப்பட்டு ஒரு நாளைக்கு ஐந்து கட்டு விறகு விற்றால்  தான் நாங்கள் சாப்பிட முடியும், விறகு விற்காவிட்டால் சாப்பாடில்லை இந்த கொரோனாவால் வந்த பயணத்தடை ஏழைகளாகிய எங்களின் வயிற்றில் அடித்து விட்டது.


இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் கிராமத்தில் அன்றாடம் விறகு வெட்டி அதை விற்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்வைக்கொண்டு நடாத்தும் ஒரு ஏழைக் குடும்பத்தின் குமுறல்.


கடந்த முற்பது வருட கால யுத்தத்தம் உயிரிழப்புக்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியதுமட்டுமல்லாது யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது

.
யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றக்கிராமங்களில் குடியேறி வாழ்ந்து வருகின்ற அதிகளவான மக்கள் அன்றாடம் உணவிற்கே அல்லாடுகின்ற நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக பெண் தலைமைத்துக்குடும்பங்கள் முதியவர்களைக் கொண்ட குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் எனப்பல தரப்பட்டவர்கள் இவ்வாறான நெருக்குதல்களுக்கு முகங்ககொடுத்து வருகின்றனர்.


இலங்கையின் இருபத்தி ஐந்து மாவட்டங்களிலும் வறுமை நிலையில் முதல் மூன்று நிலைகளிலும் உள்ள மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பல குடும்பங்கள் வாழ்வாதாரம் அற்ற நிலையில் வறியவர்களாவே வாழ்ந்து வருகின்றனர்.


ஏ-9 வீதியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பனிக்கன்குளம் கிராமத்தின் ஏ-9 வீதியின் இரு மரங்கிலும் வழமையாக ஆங்காங்கே விற்பனைக்காக விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும்.அதன் அருகில் பெண்கள், சிறுவர்கள் முதியவர்கள், வறுமையின் கோடுகள் விழுந்த முகத்துடன் வீதியால் செல்லும் வாகனங்களை பார்த்து இவர்கள் விறகு வாங்குவார்களா? அடுத்து வருபவர்கள் வாங்குவார்களா? என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள்.
இந்தக்கிராமத்தில் வாழுகின்ற மக்களில் அதிகளவானோர் வறிய குடுமப்ங்களாகவே காணப்படுகின்றன.


இவர்கள் காடுகளில் கூலிக்கு மணல் அகழ்வுகளில் ஈடுபடுதல், விறகுகளை வெட்டுதல், போன்ற கடின வேலைகளை மாத்திரம் செய்ய முடிவதாகவும் வேறு எந்தக்கூலி வேலைகளுக்கும் செல்ல முடியாது.


காரணம் கூலி வேலை செய்யக்கூடிய விவசாயக்கிராமங்கள் அல்லது வேலை வாய்ப்புக்கள் இந்த கிராமத்தினை அண்மித்த பகுதிகளில் இல்லை.
இங்கிருந்து வேலை தேடிச்செல்வதாயின் பயணத்திற்கு ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபா செலவழித்து வேலைத்தேடிச்செல்ல வேண்டும்.
அங்கு வேலை கிடைக்காவிட்டால் திரும்புவதற்கு பணம் இன்றி சிரமப்படவேண்டும்.


இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வரும் அன்றாடம் விறகுவிற்று வாழ்க்கை நடாத்தும் குடும்பத்தலைவர் ஒருவர் குறிப்பிடுகையில்; நாங்கள் அன்றாடம் காடுகளுக்குள் சென்று விறகுகளை வெட்டி வந்து வீதியில் வைத்து அதை விற்றால் தான் ஒரு வேளையாவது சாப்பிடமுடியும்,
விறகு விற்காவிட்டால், அயலர்வகளிடம் கடன் வாங்கவேண்டும். அப்படிக்கடன் வாங்குவதற்கும் அவர்களிடமும் ஏதும் இருக்கவேண்டும்.
ஆனால் இங்கே வாழ்கின்ற பலர் எங்களைப்போன்றே வாழ்கின்றார்கள்.


பலருக்கு சமுர்த்தி நிவாரணம் இல்லை. அரசாங்க உதவிகள் இல்லை. வீட்டுத்திட்டங்கள் இல்லை.
இதனால் இங்கிருப்பவர்கள் கஸ்ரப்பட்டவர்களாவே இருக்கின்றனர்; எனக் குறிப்பிட்டதுடன், நாங்கள் ஒரு நாள் முழுதும் காட்டிற்குச்சென்று விறகு சேகரித்து வீதியில் வைத்து விற்றால் தான் அரைவயிற்றையேனும் நிரப்பமுடியும், அதற்கும் பெரும் கஸ்ரம்.


காடுகளுக்குள் சென்று விறகுகளை எடுப்பதற்கு வனவள அதிகாரிகள்; பிடிப்பார்கள், காட்டு யானை கரடி போன்ற விலங்குகளுக்குப்பயம் இவற்றையெல்லாம் தாண்டி விறகை வெட்டிவந்து வீதிகளில் வைத்தால் இப்போது காஸ்அடுப்பு கரண்ட் அடுப்பு பென்றெல்லாம் வந்து சமையல் இலகுவாகிவிட்டதால், விறகு வாங்குபவர்கள் குறைவு எனவும் தெரிவித்தார்.


இந்தக்கிராமத்தில் மக்களுக்கு ஆசை வார்த்தைகளைக்காட்டி கடன்களை வழங்குன்ற நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கி விட்டு அதனை அறவிடுகின்றனர்.
இதைக்கட்டமுடியாது பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.


கிளிநொச்சி உதயநகர் கிழக்கிலிருந்து சுமார் இருபது கிலோ மீற்றர் தூரத்திற்கும் அப்பால் தினமும் சென்று விறகு வெட்டி வாழ்க்கை நடாத்தும் மானிக்கம் கிட்டினன் என்ற 60 வயது முதியவர் தான் அன்றாடம் விறகு வெட்டி விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்வதாகவும் துவிச்சக்கர வண்டியில் தினமும் அதிகாலை வேளை ஏ-9 வீதியால் கொக்காவில் காட்டிற்குச்சென்று விறகு வெட்டிக்கொண்டு வந்து கிளிநொச்சியின் பல கிராமங்களுக்குள் கொண்டு சென்று 700 அல்லது 800 ரூபாவிற்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப்பெற்று வாழ்க்கைச்செலவை கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.


இப்போது கொரோனா என்று ஊடங்கு பயணத்தடை என மாதக்கனக்கில் போக்கு வரத்து இல்லை தொழில் வாய்ப்பு இல்லை ஏழைகளாகிய எங்களின் வயிற்றில் அடித்து விட்டது.
இவ்வாறு அன்றாடம் ஒரு நேர உணவிற்கே அல்லற்படுகின்ற கிராமங்களும்; உணவின்றி வீடின்றித்தவிர்க்கும் மக்களும் ஏராளம்; இவர்களின் குறைகள் தீர்க்க உரிய வழிவகைகள் கண்டறியப்பட்டு இவர்களின் பஞ்சம் போக்கப்படவேண்டும்.

0 0 0 0 0 0
  • 301
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
Ads
Latest Posts
மயிலை கபாலீஸ்வரர் கோயில் வரலாறு
பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
 இந்து கடவுள்களின் அற்புதங்கள்
1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட
கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி
ஆடி வெள்ளியன்று  விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆ
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு?
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாராவது யோசித்துள்ளோமா?உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலை
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த   பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும்  சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
Ads