Support Ads
Main Menu
 ·   · 119 posts
  •  · 13 friends
  •  · 13 followers

நாகரீக கோமாளிகள்?

◆ ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்

அம்மாவை மாற்ற தேவையில்லை

ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்

ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை..!!

◆ காலைவணக்கம் வார்த்தை எல்லாம்

கடல் கடந்து சென்றது

Good Morning என்ற வார்த்தையில் தான்

பல குடும்பம் விழிக்குது..!!

◆ அந்நிய உணவில் தனி ருசிதான்

அதில் ஒன்றும் தவறில்லை

ஆயின் வறண்ட ரொட்டியை

திண்ணக் கூட வறட்டு கவுரவம் ஏன்???

◆ பத்து வரியை படிக்க சொன்னால்

பல்லை இளித்து காட்டுவார்,

ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி

வைத்து அறிவாளி வேடம் போடுவது ஏன்???

◆ முறுக்கும் சீடையும் கையில் தந்தால்

அலட்சியம் செய்து போவார்.

ஒரு Chip'வை வாங்கி கொண்டு

கோமான் போல திரிவது எதனால்??

◆ நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்

அலப்பறை அதிகமாய் மின்னும்

நாலு வரி பேச தெரிந்துவிட்டால்

மனதில் சேக்சுபியர் என்று எண்ணம் ஏன்??

◆ பாரதி கவிதை பைந்தமிழ் நூலை

புரியாதவர் போல படிப்பார்..

Harry Potterஐ வாங்கி வைத்து

மேதாவி போல நடிப்பது எதற்காக??

◆ நண்பா தோழா என்பதை

பழமை சாயம் பூசுவார்

Bro, Dude என்பதை எல்லாம்

புரியாமலே பேசுவது எதற்காக??

◆ அம்மா Mummy ஆனது அழகிய தமிழ்மொழி

Dummyஆனது, ஆங்கிலம் என்பது

பெருமையானது எதனால்???

நீங்கள் அலட்டிக்கொள்வது

மடமையானது.

◆ அரசியலில் தான் விடுதலை பெற்றதாக நினைக்கிறோம், ஆனால் 

நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை ஏன்??

◆ சுயவளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்

அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லைதானே??

◆ பெருமைக்கு பேசுவதை குறைத்து கொள்ளுங்கள் தவறில்லை,  நம் பெருமை எல்லாம்

கொஞ்சும் தமிழ்தான் என உரைத்து சொல்லாமல் தயங்குவது ஏன்???

0 0 0 0 0 0
  • 177
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
Ads
Latest Posts
மயிலை கபாலீஸ்வரர் கோயில் வரலாறு
பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
 இந்து கடவுள்களின் அற்புதங்கள்
1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட
கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி
ஆடி வெள்ளியன்று  விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆ
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு?
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாராவது யோசித்துள்ளோமா?உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலை
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த   பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும்  சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
Ads