Support Ads
Main Menu
 ·   · 208 posts
  •  · 2 friends
  •  · 2 followers

சாஸ்திரம் ...... தெரிந்துக் கொள்வோமா?

1.இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.


2.சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.


3.தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும். நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.


4.முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.


5. உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.


6.அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.


7.ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.


8.அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.


9.ஆண் குழந்தை பன்னிரெண்டாவது மாதத்திலும்,பெண் குழந்தை எட்டாவது மாதத்திலும் பேசத் துவங்கும்.ஆகவே.பெண் குழந்தைக்கு எட்டாவது மாதத்திலும்,ஆண் குழந்தைக்கு பன்னிரெண்டாவது மாதத்திலும் சாதம் ஊட்டுதல் வேண்டும்.


10.சிகப்பு நிறம் நல்லதிர்ஷ்டத்தைக் குறிக்கும் நிறமாகும்.திருமணத்தின் போது மணமகள் சிகப்பு நிறப் பட்டாடை உடுத்துவது உத்தமம்.சிகப்பு நிற பெட்டியில்,அல்லது பீரோவில், சிகப்பு நிற பையில் பணம் சேர்த்து வைத்தால் அது மென்மேலும் பெருகும்.சிகப்பு நிறம் சோம்பேறிகளை சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும்.


11.தேங்காயைத் தானம் செய்தால் பசுவைத் தானம் செய்த பலன் உண்டாகும்.


12.ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது 100 முறை ஆலய தரிசனம் செய்வதற்கு சமம்.


13.வஸ்திர தானத்தால் சர்வ தேவதைகளும் சந்தோஷம் அடைகின்றனர்.ஆயுளும் விருத்தியாகின்றது.ஆகவே ஆயுளைப் பெருக்கும்  வஸ்திர தானம் மிகவும் நல்லது.(ஆடை தானம்)


14.தேய்பிறை அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் ஒரு வேளை சாப்பிட்டு விரதம் இருந்து சிவபெருமானைப் பூஜிப்பவர்களுக்கு வியாதிகள் நீங்கும்;உடல் வலிமை அதிகரிக்கும்.


15.சந்திராஷ்டமக் காலங்களில் செம்பருத்தி,அருகம்புல் இவைகளுடன் இடையில் மல்லிகை கட்டி கணபதிக்கும், திருமாலுக்கும் மாலையாக அணிவித்தால் பலகாரியங்கள் நல்ல படியாக முடியும்.


16.ஸ்ரீ சரபேஸ்வரர்,கோர்ட் வழக்கு களிலிருந்து நம்மை விடுவிக்கும் தெய்வம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் இவரை வணங்கி வந்தால் வழக்குகளில் வெற்றி உறுதி.


17.வங்கியில் கடன் வாங்க திங்கட்கிழமை உகந்ததாகும்.


18.செவ்வாய் கிழமையன்று கடன் வாங்குவதோ,வட்டி வரும் என்ற நோக்கத்தில் பணம்  வட்டிக்கு விடுவதோ கூடாது.ஆனால்,ஏற்கனவே வாங்கிய கடனில் ஒரு சிறு அளவேனும் செவ்வாய் கிழமையன்று கொடுத்து விட்டால் வெகு விரைவில் கடன் முழுதும் அடைபட்டு விடும்.


19.நீண்ட கால வைப்பு நிதியில் வங்கியில் பணம் போட புதன் கிழமை உகந்ததாகும்.


20.வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்க வியாழன்,வெள்ளி கிழமைகள் உகந்ததாகும். மேலும் தங்க பிஸ்கட் வாங்கவும் இவ்விரு நாட்களும் உகந்ததாகும்


21.மாலைச் சூரியனையோ , மதியச் சூரியனையோ, நமஸ்கரிக்கக் கூடாது.காலைச் சூரியனை அதுவும் காலை 8.00மணிக்குள்ளேயே கும்பிட வேண்டும்.அதுவும் எப்படி? குளித்து முடித்து ஈர உடம்போடு கும்பிட வேண்டும்.


22.பில்லி,சூனியம்,திருஷ்டி,ஏவல் போன்றவற்றால்,ஏற்படும் துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள,மகிழம்பூ மாலையை ஸ்ரீ நரசிம்மருக்கு, சாற்றி சுதர்சனத் துதிகள் ஓதி வழிபட்டிடுக.


23.அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிலோ,எதிரிகள் வீட்டிலோ,விருந்து சாப்பிடும் போது இதைத் தவிர்ப்பது நல்லது. இறைச்சியும்,உளுந்தும் வசியத்துக்கு ஏற்றவை.

குறிப்பாக கோழிக் குழம்பு,உளுந்த வடை ஆகியவைகளுக்கு இந்த சக்தி அதிகம் உண்டு.


24.விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால் எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ,திரியை நிமிண்டுவதோ கூடாது.இதனால் வீண் சாபங்களும், தோஷங்களும் ஏற்படுகின்றன. பதிலாக திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம்.

0 0 0 0 0 0
  • 229
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
Ads
Latest Posts
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
 இந்து கடவுள்களின் அற்புதங்கள்
1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட
கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி
ஆடி வெள்ளியன்று  விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆ
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு?
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாராவது யோசித்துள்ளோமா?உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலை
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த   பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும்  சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
திருவண்ணாமலை கிரிவலம்  தோன்றியது எப்படி?
முதன்முதலில் கிரிவலம் சென்றது யார்??  இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி
Ads