Support Ads
 ·   ·  964 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கோவிந்தா ......கோவிந்தா......

ஆடியோ வடிவிலும் கேட்கலாம்......

govindaa.mp3

ஒருமுறை  மகாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க முடிவு செய்து, மனித வடிவில் திருப்பதிப் பகுதியில் தோன்றினார்.

மனித உருவில் வந்த காரணத்தால் அவருக்கும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வுகள் இருந்தன. தான் பால் அருந்த ஒரு பசு இருந்தால் நலம் என்று நினைத்தார்.

அவர் வசிக்கும் மலைக்கு அருகிலேயே ஒரு மலையில் தான் மாமுனிவர் அகத்தியரின் ஆசிரமமும் இருந்தது.

அகத்தியர் தன் ஆசிரமத்தில் பெரிய கோசாலை ஒன்றை வைத்திருந்தார். அதில் நூற்றுக் கணக்கான பசுக்கள் இருந்தன.

வேங்கடேசன் அவர் குடிலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும்  வேங்கடேசனை வணங்கி வரவேற்றார் அகத்தியர். 

முனிவரே, நான் கலியுகத்தில் சில செயல்களை முடிக்கத் திருவுளம் கொண்டு இங்கு வந்து வந்திருக்கிறேன். தங்களிடம் உள்ள பசுக் கூட்டங்களிலிருந்து எனக்கு ஒரு பசுவினை தானம் செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

கேசவா!.....நீர் யார் என்பதை நான் நன்கு அறிவேன்.உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய நியதி எதுவுமில்லை. பசுவினை பிரம்மச்சாரியான உமக்கு  தானம் தர முடியாது. ஏனெனில், ஒருவன் இல்லறத்தில் இருக்கும் போது தான், அவனுக்கு தானமாகத் தரப்படும் பசுவினை அவன் நல்ல முறையில் பராமரிப்பான். இல்லத்தில் இருக்கும் அவன் மனைவி அந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்வாள்.அப்படிப் பணிவிடை செய்ய ஆள் இல்லாத பிரம்மச்சாரிக்கு பசுவை தானமாகத் தர இயலாது.

மேலும் கலியுகத்தில் தாங்கள் அவதரித்தது போல், அன்னை மகாலஷ்மியும் அவதரித்திருக்கிறார். நீங்கள் அன்னையைக் கரம் பற்றி தம்பதி சமேதரராக இங்கு வருவீர்கள் என்றால், நான் அடுத்த கணமே தங்களுக்கு ஒரு பசுவை தானமென அளிக்கிறேன்" என்று பணிவுடன் கூறினார்.

பெருமாளும் அகத்தியர் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர் அன்னை பத்மாவதியைத் திருமணம் செய்து கொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்குச் செல்லத் தொடங்கினார்.

அதற்கு முன்னர், அகஸ்தியரின் குடிலுக்குச் சென்று அவர் தருவதாகச் சொன்ன பசுவையும் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தார்.

அதற்காக அவர் அகஸ்தியரின் இருப்பிடம் சென்றார்.ஆனால்,  அப்போது அகத்தியர் அங்கே இல்லை. முனிவரின் சீடர்களே, அங்கிருந்தனர்.

அவர்களிடம் பெருமாள் அகத்தியர் தமக்கு ஒரு பசுவை தானமாகத் தருவதாக வாக்குப் கொடுத்து இருக்கிறார்' என்பதைச் சொல்லி பசுவைப் பெற்றுச் செல்லவே தான் வந்திருப்பதாகச் சொன்னார்.

செய்வதறியாது திகைத்தனர் சீடர்கள்.ஐயா, தங்களையும் அன்னையையும் கண்டால் வைகுண்ட வாசனான அந்தப் பரந்தாமனையும் *அன்னை மகாலஷ்மியையும் காண்பது போல் உள்ளது.

தாங்கள் கேட்டு மறுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு. இந்த ஆசிரமத்தில் அனைத்தும் எங்கள் குருநாதர் அகஸ்தியருக்கே உரிமையானவை. அவர் அனுமதியில்லாமல் நாங்கள் எதையும் தரவும் பெறவும் இயலாது. 

நீங்கள் அவர் வரும் வரை இங்கேயே தங்கியிருந்தால் நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யக் காத்திருக்கிறோம்.அதன் பின் குருதேவர் வந்ததும்,  நீங்கள் பசுவினை அவரின் திருக்கரத்தாலேயே பெற்றுச் செல்லலாம்" என்றனர்.

பெருமாளும் அவர்கள் சொன்ன பதிலில் வருத்தம் கொள்ளாது, அவர்களின் குருபக்தியையும், அதிதிகளிடம், காட்டும் மரியாதையையும் கண்டு மகிழ்ந்தார். 

பின்பு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு தன் நிரந்தர வாசஸ்தலம் நோக்கிப் புறப்பட்டார். சற்று நேரத்துக்கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றார்.

உலகையே காக்கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்கழித்து விட்டதற்காக வருந்தினார். எப்படியும் பெருமாளைச் சந்தித்து தன்னிடம் உள்ளதில் ஆகச் சிறந்த பசுவினைத் தந்து விடுவது என்று முடிவு செய்து காமதேனுவைப் போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக் கொண்டு, பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக் கொண்டே சென்றார்.

வேகமாக நடந்ததில் கொஞ்ச நேரத்திலேயே பெருமாள் முன்பாக நடந்து செல்வதை அகத்தியரும் பார்த்து விட்டார். பெருமாளை நோக்கிக் குரல் கொடுத்தார். " சுவாமி கோவு  இந்தா " என்று சத்தமிட்டார். தெலுங்கில்  "கோவு " என்றால் பசு. இந்தா' என்றால் 'எடுத்துக் கொள்' என்று பொருள். 

ஆனால், சுவாமிக்கு முனிவரின் குரல் கேட்கவில்லை போலும். மீண்டும் சத்தமாக `சுவாமி கோவு இந்தா என்று சொன்னார்.

அப்போதும் அவர் திரும்பவில்லை. மீண்டும் மீண்டும் சுவாமி கோவு இந்தா...

 சுவாமி கோவு இந்தா...  சுவாமி கோவு இந்தா"  என்று அழைத்துக் கொண்டே யிருந்தார்.

அதுவரை அன்னநடை போட்டுக் கொண்டிருந்த பெருமாளும் தாயாரும் விரைவாக நடக்க ஆரம்பித்து விட்டனர். அகத்தியரோ, தன் குரலை இன்னும் உயர்த்தி கோவு இந்தா கோவு இந்தா' என்று வேகவேகமாக உச்சரிக்க அதுவே சற்று வேகமான வழக்கில் வார்த்தையில் கோவிந்தா... கோவிந்தா என்று ஆனது.

கோவிந்தா, கோவிந்தா என்று அவர் அழைத்தது 108 முறை ஆனதும் பெருமாள் நின்றார்.திரும்பிப் பார்த்தார். அகஸ்தியர் மூச்சு வாங்க அவரிடம் ஓட்டமும் நடையுமாய்ப் பசுவோடு வந்தார்.

பெருமாள் அவரை ஆசுவாசப் படுத்தி, அந்தப் பசுவை தானமாகப் பெற்றுக் கொண்டார். பின்னர், இந்தக் கலியுகத்தில் என்னை அழைக்க உகந்த நாமம் கோவிந்தா என்பதே. 

நீங்கள் கோவு - இந்தா' என்று சொன்னதன் மூலம் கோவிந்தா என்னும் நாமத்தைச் சொல்லி என்னை மகிழ்ச்சிப்படுத்தினீர். 

நீர் மட்டுமல்ல, இனி யார் யார் எல்லாம், தம் (ஜீவனை) பசுவினை என்னிடம் சேர்ப்பிக்க விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாருமே கோவிந்தா என்னும் நாமத்தைச் சொன்னாலே போதும், 

நான் உடனடியாக அவர்களை நோக்கி விரைவாக அனுக்கிரகம் செய்வேன்" என்று சொல்லி விடை பெற்றுத் திருமலையில் ஆனந்தமாக ஆர்ப்பாட்டமின்றி குடிபுகுந்தான் வேங்கடவன்.

நாமும் "கோ இந்தா",  "ஜீவன்  இந்தா" கோவிந்தா என்போம்.....ஆர்ப்பாட்டமின்றி இவ்வுலக பயம் இன்றி அவன் திருப்பாதம் (திருப்பதி) அடைவோம்.

  • 332
  • More
Attachments
govindaa.mp3
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்