- · 5 friends
-
I
எது வெற்றி ? (உண்மைச்சம்பவம்)
ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
“இப்போ வலி போயிடிச்சா” அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள். பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை.
இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
அந்த விழாவை நடத்தியது மனநலம்
குன்றியவர்களுகா ன தேசிய நிறுவனம். அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள். ஆம், அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆனால்... குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?
மனித ஒற்றுமை மனித நேயம் மனித சமத்துவம்.....
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள். அன்பு மட்டுமே இந்த
உலகை நிற்காமல் ஓட வைக்கும்.
தூய்மை, பொறுமை,விடா முயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையா கும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·