·   ·  983 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

செவ்வாய் கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

🌺 நமது முன்னோர்கள் நவகிரகங்களில் ராகு-கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு வார தினங்களுக்கு (ஞாயிறு முதல் சனி வரை) பெயர் வைத்தனர்.

🌺அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன் செவ்வாய்க்கிழமை உண்டாயிற்று. கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். அதனால் தான் குடும்பத்தில் மங்களகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை மேற்கொள்கிறோம்.

🌺முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாக செவ்வாய் இருக்கிறது. ஆனால், நாம் விசேஷங்களை செய்வதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புதிய செயல்களை துவங்குவதற்கும், புத்தாடை அணிவதற்கும் என பல விஷயங்களுக்கு செவ்வாய்க்கிழமையை தவிர்த்து விடுகிறோம்.

🌺பெயரிலேயே மங்களம் இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் செயல்களில் நிச்சயம் வெற்றி உண்டாகும். அதேபோல் மங்களகாரகன் என்கிற பெயர் மட்டுமல்லாமல், செவ்வாய்க்கு பூமிகாரகன் என்கிற பெயரும் உண்டு.

🌺நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்.

🌺ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் மேற்கண்ட அனைத்து விஷயங்களில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி நன்மைகளை பெற செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்.

விரதம் இருப்பது எப்படி?

🌺செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் அதிகாலையில் நீராடி, அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

🌺பிறகு வீட்டிற்கு திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

🌺கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

🌺மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை உளமார வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும்.

விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

🌺சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.

🌺பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும்.

🌺செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றி கொடுக்கும்.

🌺செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன.

🌺சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும்.

🌺ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோவிலுக்குச் சென்று, முருகனை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்குள் வரும்.

  • 572
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்