Support Ads
Main Menu
 ·   · 176 posts
  •  · 2 friends
  •  · 2 followers

தெய்வ நம்பிக்கை - ஒரு குட்டிக் கதை

அது ஒரு சின்ன கிராமம்.


அந்த கிராமத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில். அந்த கோவிலில் திருவிழா.


அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க. ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.


இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான். இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும், கோவில்ல இருக்காங்க. நமக்கு நல்ல வேட்டைதான். வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.


அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட, உருப்படியா ஒன்னும் இல்லை. 


என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே. அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான்.


அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம்.


பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.


குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு. அவன் கழுத்துல தங்க மாலை போட்டு இருப்பான். இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான். காதுல வைர கடுக்கன். கையில தங்க காப்பு. கால்ல முத்து பதிச்ச தண்டை. அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும். இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர். 


இதை கேட்டான் திருடன். அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது. அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான்.


அடடா... அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார். அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு, நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான். அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான்.


கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு, மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன். ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார். எங்கே இருப்பான். உடனே சொல்லு. இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.


பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு. கடவுளே இது என்ன சோதனை. நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன். இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே. அப்படின்னு யோசித்தவர்...


அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை, அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான். போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.


திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான். கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.

அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.


உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான். பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான்.

உண்மைதான்... அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான்.


மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு. அதை எனக்கு தருவியான்னு கேட்டான். கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான். நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.


தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.


அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட ஆரம்பிச்சுடிச்சு. திருடன் போய் சோலைல பார்த்திருப்பான். கண்ணன் வந்திருக்க மாட்டான். அந்த கோபத்தோட வருவான். இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது, திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி... ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான்.


பாகவதருக்கு பயம் போயிடிச்சு. என்னப்பா சொல்றேன்னார்.


உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி சின்ன கண்ணன் வந்தான். என்ன அழகு. என்ன சிரிப்பு, அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.


நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான். இதோ அந்த நகை எல்லாம் இருக்கு. உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.


பாகவதரால நம்பவே முடியலை. என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார்.


ஆமாம் சாமி. உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான். வாங்க கட்டுறேன்னு சொன்னான்.


நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார். சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான்.


பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை. சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.


இது என்ன சோதனை... என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன் கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.


அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது. உடனே அவன் கையை பிடிச்சார். நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார்.


கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன். அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது. இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய். 


அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.


பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும், நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை. 


நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.


ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை. நான் இருக்கேன் என்று நம்பினான். நான் வருவேன் என்று நம்பினான். அதனால் வந்தேன். 


கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான்.

0 0 0 0 0 0
  • 110
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
காளிதாசர்
 ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!  சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில்
கபசுர குடிநீரின் நன்மைகள், அதை பயன்படுத்த வேண்டிய முறைகள்
கொரோனாவை தொடர்ந்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பானமான கபசுரக்குடிநீரின் மீது எல்லோர் பார்வையும் திரும்பியிருக்கிறது.தற்போது க
Ads
Latest Posts
படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டு
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
மன்மதன்சிலை..! எங்குள்ளது தெரியுமா?
இந்த மன்மதன் சிலையில் 6 அடியில் வில் உள்ளது. அந்த வில்லின் மேல் பகுதியில் உள்ள சிறு துளையின் வழியாக கடுகை போட்டால், அந்த கடுகு வில்லில் புகுந்து கீழே
சாஸ்திரம் ...... தெரிந்துக் கொள்வோமா?
1.இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒ
இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்
ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?  அக்கோயில் மதுரை மாவட்டம்
ஆயிரத்து எட்டு லிங்கங்கள் பெயர்கள் இதோ.....
1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி ல
Ads