Support Ads
Main Menu
 ·   · 110 posts
  •  · 12 friends
  •  · 12 followers

இந்த ஆண்டின் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும் பெரிய நிலா தோன்றியது.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இந்த ஆண்டின் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும் பெரிய நிலா தென்பட்டது. இது போன்று பல நாடுகளில் இது தென்பட்டுள்ளது. தேசிய வானிலை சேவை அப்ஸ்டேட் நியூயார்க்கில் பெரும்பாலானவர்கள் அதை பார்க்க முடியும் என்று கூறியது,

Camlica மசூதி மற்றும் Galata Tower இடையே இந்த சூப்பர் மூன் தோன்றியது. சந்திரன் பூமிக்கு அருகில் வரும் போது வழக்கமாக காணப்படும் நிலா தன்னுடைய அளவில் சற்று பெரியதாக காணப்படும்.  சூப்பர்மூன்கள் வழக்கமான நிலாவை  விட 7% பெரியதாகவும் 15% பிரகாசமாகவும் தோன்றும்.

இதற்கிடையில் இந்த ஆண்டிற்கான சூப்பர் மூனை பிங்க் சூப்பர் மூன் என்று நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வானில் அற்புதமாய் தோன்றிய இந்த சூப்பர்மூனை துருக்கி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அமீரகத்தில் ‘பிங்க் சூப்பர் மூன்’ வானில் பிரமாண்டமாக காட்சியளிக்க உள்ளது. பொதுவாக பூமியை நிலவானது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நீண்ட தொலைவுக்கு செல்லும் பாதை அபிஜீ என்றும், குறைந்த தொலைவில் வரும்போது பெரிஜீ என்றும் அதன் தொலைவானது அழைக்கப்படுகிறது.

பூமியில் இருந்து குறைந்த பட்சமாக பெரிஜீ சுற்றுப்பாதையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக அபிஜீ பாதையில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலவானது சுற்றிக் கொண்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நீள்வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நிலவானது வரும் போது வழக்கமாக நாம் பார்க்கும் நிலவைவிட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் அதிக ஒளியுடனும், பிரகாசமாகவும், தெளிவாகவும் காணப்படும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வ காட்சியை சூப்பர் மூன் அதாவது ‘‘சூப்பர் நிலவு’’ என்று அழைக்கிறோம்.

இன்று வானில் தெரிய இருக்கும் அரிய காட்சி ‘பிங்க் சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்காவில் வசித்த பூர்வகுடிமக்களே அந்த பெயரை சூட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் புளோக்ஸ் என்ற மலை உள்ளது. இந்த மலையில் ஏப்ரல் மாதத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் வைல்டு கிரவுண்ட் புளோக்ஸ் என்ற பூக்கள் பூக்கின்றன. எனவே இந்த பூக்கள் பூக்கும் காலத்தில் இந்த முழு நிலவு காட்சியளிப்பதால் இளஞ்சிவப்பு நிறத்தையே இந்த நிலவுக்கு பெயர் வைத்துள்ளனர். இதுவே சூப்பர் பிங்க் மூன் என்ற பெயரை இந்த முழு நிலவுக்கு சூட்ட காரணமாக அமைந்தது.

அமீரக நேரப்படி இன்று காலை 7.32 மணிக்கு சூரியனுக்கு எதிரே இந்த பிரமாண்ட நிலவு தோன்றும். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த நிலவானது வானில் தோன்றும். இந்த சூப்பர் மூன் அமீரகத்தில் மீண்டும் அடுத்த மாதம் (மே) 26 ஆம் திகதி  அன்று 2-வது முறையாக காட்சியளிக்கும்.

இந்த ஆண்டு வேறு எந்த சூப்பர்மூன்களும் (அல்லது இளஞ்சிவப்பு நிலவுகள்) ஏற்படாது, ஆனால் சில வெளியீடுகள் கடந்த மாதத்தின் “புழு” சந்திரனையும் வரவிருக்கும் ஜூன் நிலவையும் சூப்பர்மூன்களாக வரையறுக்கக்கூடும் என்று சிஎன்என் தெரிவிக்கிறது.

0 0 0 0 0 0
  • 242
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
காளிதாசர்
 ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!  சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில்
Ads
Latest Posts
ஆனி மாதத்தில் ஏன் 32 நாட்கள் வருகிறது?
தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. பங்குனி மாதம் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என ஒவ்வொரு மாதம் 30, 31 நாட்கள் கொண்டு முடிய
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படி
தாய்ப்பாசம்......
என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப்
பேச்சு திறமை
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிர
அன்றாடம் விறகு வெட்டி அதை விற்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்வைக்கொண்டு நடாத்தும் ஒரு ஏழைக் குடும்பத்தின் குமுறல்.
கஸ்ரப்பட்டு ஒரு நாளைக்கு ஐந்து கட்டு விறகு விற்றால்  தான் நாங்கள் சாப்பிட முடியும், விறகு விற்காவிட்டால் சாப்பாடில்லை இந்த கொரோனாவால் வந்த பயணத்தடை ஏழ
Ads