Ads
ஆப்கானிஸ்தான் 5வது முறையாக நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்ச்சி மறைவதற்கு மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதற்கு பின் மீண்டும் 7.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் என தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரம் வெளியாகவில்லை.
அதற்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காலை 12.15 மணியளவில் ஃபாயிஸாபாத் அருகே பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகி வருவது ஆப்கானிஸ்தானை மட்டுமல்லாமல் அண்டை நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Info
Ads
Latest News
Ads