Category:
Created:
Updated:
குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து மதுரைக்கு வரும் அவரை தமிழக ஆளுனர் ஆர் என் ரவி வரவேற்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் அவர் அங்கிருந்து கோவைக்குப் புறப்படுகிறார்.
விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் மாலை 6 மணியளவில் கோவை, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
நாளை நீலகிரி முப்படை பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார்.