நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதாரப் புரட்சி வௌியீடு
முறையான மற்றும் புரட்சிகரமான பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து கட்டியெழுப்ப முடியும் எனவும், இதற்கு தலைமை தாங்கக்கூடிய அணி ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்நாட்டை இந்தப் படுகுழியில் இருந்து மீட்க முடியுமா என்று யாராவது கேட்டால் அதற்கும் உறுதியான பதிலாகும் “ஆம் முடியும்" என்பதே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களின் ஒன்றுபட்ட அர்ப்பணிப்பும் தேவை எனவும் அவர் தெரிவித்தார். தேசிய அறிஞர்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் "THE BLUE PRINT" பொருளாதார மாநாடு நேற்று (14) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம், ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் இலங்கையின் பிரபல வர்த்தகர்கள் என பெருமளவிலானோர் இதில் கலந்து கொண்டனர். கடன் பொறியிலிருந்து விடுபடுவது எவ்வாறு மற்றும் நிலையான அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வும் இங்கு இடம் பெற்றது.