Category:
Created:
Updated:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சமீபத்தில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்திய அரசியல் தலைவர்களும் இலங்கை அரசும் பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினர்.
இந்த நிலையில் பிரபாகரனுடன் இருந்த சிலர் இது குறித்து கூறியபோது பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி வரை களத்தில் இருந்தார் என்றும் அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் உயிரோடு இருந்தால் அவரே அதனை அறிவிக்கும் வரை உண்மை வெளிவரப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.