பாராளுமன்ற காணொளி கூட்டத்தில் நிர்வாணமாக தோன்றிய எம்.பி.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதல் பெரும்பாலான ஆலோசனைக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், உச்சிமாநாடுகள் காணொளி வாயிலாகவே நடத்தப்படுகின்றன. அவரவர் இருக்குமிடத்தில இருந்தே காணொளி வாயிலாக கூட்டத்தில் கலந்துக் கொள்ளலாம்.
காணொளி வாயிலாக நடைபெற்ற கனடா பாராளுமன்ற கூட்டத்தில் எம்பி வில்லியம் ஆமோஸ் கலந்துகொண்டார். அப்போது, அவர் கையில் செல்போனுடன், கியூபெக்-கனடா தேசியக்கொடிகளுக்கு மத்தியில் நிர்வாண நிலையில் தோன்றினார். காணொளியில் இணைந்திருந்த மற்ற உறுப்பினர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த செயலால் வெட்கித் தலைகுனிந்த எம்.பி. வில்லியம் ஆமோஸ், நடந்த தவறுக்காக சக உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
‘நான் இன்று மிகவும் மோசமான தவறைச் செய்துவிட்டேன். இதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜாகிங் சென்று திரும்பியதும் உடை மாற்றியபோது, கேமரா தற்செயலாக ஆன் ஆனதை கவனிக்கவில்லை. இதற்காக சபையில் உள்ள சக உறுப்பினர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது’ என்று வில்லியம் கூறியுள்ளார்.