மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை
தற்போதைய எதிர்பாராத பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களும் ‘நியாயமாக நடந்தகொள்வதன்’ முக்கியத்துவத்தை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்ட மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.
பொது மக்கள் மீதான தற்போதைய பொருளாதார இன்னல்களின் சுமையினைத் இலகுபடுத்துவதற்கு அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. வங்கித்தொழில் முறைமையில் காணப்படும் வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை பற்றாக்குறை பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவான இன்னல்களுக்கும் பங்களிக்கின்ற முக்கிய காரணியாக விளங்குகின்றது. அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை பற்றாக்குறையானது எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியினையும் பாதித்துள்ளது. வங்கித்தொழில் முறைமையில் போதுமான வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மையினை உறுதிசெய்யும் பொருட்டு, ஏற்றுமதி வருவாய்கள் மீதான ஒப்புவித்தல் தேவைப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி விதிக்கவேண்டியிருந்தது. மேலும், சில இறக்குமதிகள் மற்றும் கொடுப்பனவு நியதிகள் மீதான கட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் எல்லைத் தேவைப்பாடுகளை அறிமுகப்படுத்தல் போன்ற வெளிநாட்டுச் செலாவணி வெளிப்பாய்ச்சல்களை ஊக்கமிழக்கச் செய்கின்ற அதேவேளை கண்காணிக்கப்படாத சந்தை ஊடாக பணம் அனுப்படுவதை தவிர்;த்து வங்கித்தொழில் முறைமையூடாக வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கினாலும் வழிமுறைகள் எடுக்கப்பட்டிருந்தன. இவ்வொழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளின்; வெற்றியும் உத்தேசிக்கப்பட்ட பெறுபேறுகளை அடைந்துகொள்வதற்கான இயலுமையும் வர்த்தக சமூகம் மற்றும் வங்கித்தொழில் முறைமை என்பவற்றிலிருந்து கிடைக்கும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றிலேயே தங்கியுள்ளது.
எவ்வாறாயினும், அவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்தல்களுடன் சில சந்தை செயற்பாட்டாளர்கள் முழுமையாக இணங்கியொழுகவில்லை என்பது மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வாறான நடைமுறை தொடருமாயின், இக்கட்டான காலகட்டத்தில் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொதுமக்களுக்கான ஆதரவு இல்லாமற் செய்யப்படுகின்ற அதேவேளை கடினமான அத்துடன் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் அனைத்து ஆர்வலர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ‘துன்பத்தை சமமாகப் பகிர்ந்துகொள்ளல்’ என்ற அறநெறி சார்ந்த கடப்பாடு புரந்தள்ளப்படுகின்றது.