அடிக்கடி செல்போனில் பேச்சு அண்ணியின் நடத்தையில் சந்தேகம்: கொலை செய்த மைத்துனர்
மீரட் மாவட்டத்தின் ஜானி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியின் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரவ். (வயது 25 ) இவர் ட்விங்கிளை 2017-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன . இந்த நிலையில் கணவர் 2021 -ம் ஆண்டு எதிர்பாராத விதமாக லாரி விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் .அவருக்கு அபிஷேக் என்னும் தம்பி உள்ளார் . மேலும் கணவர் மறைவுக்கு பின்னர் அண்ணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி செல் போனில் பேசுவதை பார்த்த அபிஷேக் ஆத்திரம் கொண்டார். அவரது நடத்தையை சந்தேகிக்க பட ஆரம்பித்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு முதல் மாடியில் உள்ள அண்ணியின் அறைக்கு சென்றார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அண்ணியை சுத்தியலால் கண்மூடித்தனமாக தலை மற்றும் உடலை பல இடங்களில் வெட்டியும் உள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். நடத்தையில் சந்தேகம் காரணமாக. இசம்பவத்தில் அபிஷேக் கைது செய்யப்படுள்ளார் .