Category:
Created:
Updated:
தமக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ "இல்லை, முடியாது " என்ற கதைக்கு இடமில்லை என்றும், எந்த தருணத்திலும் மக்களுக்கான தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (6) தெரிவித்தார்.
நாட்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு இருக்கும் தருவாயில் டொலர் தட்டுப்பாடே இதற்கு காரணமென பலரது கருத்தாக இருப்பினும், உண்மையான காரணம் என்னவெனில், அதற்கான தகவல் தரவுகளை களஞ்சியப்படுவதிலுள்ள சிக்கலே எனவும், தெரிந்து கொண்டே இதற்கு மேலும் மக்களுக்கு பொய்யுரைக்காமல் தற்போதுள்ள செயல்முறைகளை சரிவர செயற்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.