Category:
Created:
Updated:
உணவு பாதுகாப்பை தன்னிறைவாக்கும் மரவள்ளித்தடி வழங்கும் பணி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச் சந்தை முன்பாக இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முகமாகவும், மரங்களை நாட்டுவதை ஊக்குவிக்கும் முகமாகவும் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மத தலைவர்கள் மற்றும் செயற்பாட்ாளர்கள் மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது குறித்த மரவள்ளி தடிகளை தலா ஐந்து தடிகள் எனும் அடிப்படையில் பொதுமக்களிற்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் 5000 மரவள்ளி தடிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.