Category:
Created:
Updated:
மஹிந்த சூறாவளியை ஏன் உருவாக்கினார்கள்? மஹிந்த சூறாவளி இன்றி அவர்களால் பயணிக்க முடியாது. எல்லோரும் உங்கள் புகைப்படத்தை பயன்படுத்தித்தான் அரசியல் செய்தார்கள். நீங்கள் இல்லாமல் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் யாரும் கூட்டம் நடத்த முடியாது. அதுதான் கசப்பான உண்மை. உங்களை காண்பித்தால் தான் அவர்களுக்கு அரசியலில் இருக்க முடியும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (05) நாரம்மலவில் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று காலை நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.