Category:
Created:
Updated:
சிலம்பு என்பது தற்காப்பு கலை மட்டுமல்ல அது தமிழர்களின் அடையாளம் எனவே இந்த தற்காப்பு கலையினை கொட்டகலை பகுதியில் நடத்துவதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த கலையினை வளர்ப்பதற்காக கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன். எதிர்காலத்தில் மிகப்பெரிய சிலம்பாட்ட போட்டியொன்று நடைபெறும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர கலைகளில் ஒன்றான தேசிய இரண்டாவது சிலம்பாட்ட போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று (06) கொட்டகலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.