
துணுக்காய் பாண்டியன்குளம் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா
முல்லைத்தீவு மல்லாவி நகரில் அமைந்துள்ளது துணுக்காய் பாண்டியன்குளம் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவும் பொங்கல் விழாவும் நேற்றிரவு (05-03-2022) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன.
முல்லைத்தீவு மாந்தைகிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் கலைகலாச்சார விழுமியங்களை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட துணுக்காய் பாண்டியன்குளம் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவும் பொங்கல் விழாவும் நேற்று (05-03-2022) பிற்பகல் 5 மணிமுதல் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளன.
இதில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார் குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் பாடசாலைகளினன் அதிபர்கள் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் உடைய ஆலோசகர்கள் காப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் கொவிட் -19 காலத்தில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் மணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.