
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தேசிய சேமிப்பு வங்கியின் இலங்கை மகளீரை அணிதிரட்டுதல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பினை அதிகரித்தலினதும் முக்கியத்துவம் எனும் தொணிப் பொருளிலான மகளீர் தின நிகழ்வு இன்று (05-03-2022)நடைபெற்றுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய சேமிப்பு வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை மகளீரை அணிதிரட்டுதல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பினை அதிகரித்தலினதும் முக்கியத்துவம் எனும் தொணிப் பொருளிலான மகளீர் தின நிகழ்வு இன்று (05-03-2022) பகல் 9 மணிக்கு திருவையாறு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் முதன்மை விருந்தினராக மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் கார்த்திகா நிறோஜன்; மற்றும் சிறப்பு விருந்தினர்களாக உருத்திரபுரம் புனித பற்றிமா வித்தியாலய முதல்வர் வைத்தியஅதிகாரி ஜீ.நிதிகா தொழில்நுட்பக்கல்லூரியின் விரிவுரையாளர் ரீ. நிலோஜனா மற்றும் பகுதிக் கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தேசிய சேமிப்பு வங்கியின் கடன்களுக்கான சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது நிகழ்வில் கிராம மக்கள் பயனாளிகள் தேசிய சேமிப்பு வங்கியின் பணியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.