Category:
Created:
Updated:
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷியா குடியிருப்பு பகுதிகளிலும் குண்டுகள் வீசுவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதை ரஷிய அதிபர் புதின் மறுத்துள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஷோல்ஸ்சுடன் ரஷிய அதிபர் புதின் நேற்று தொலைபேசியில் பேசும்போது, உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தவில்லை என்றும் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.