
சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் அதிகரிப்பு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வயது வந்த பெண் பிள்ளைகள் பல்வேறு நெருக்கடியில்
கிளிநொச்சி குமாரசுவாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை உற்பத்திகள் அதிகரித்துக் காணப்படுவதுடன் இதனால் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள குமாரசுவாமிபுரம் பகுதியில் தற்போது என்றுமில்லாதவாறு சட்டவிரோத கசிப்பு விற்பனை உற்பத்திகள் அதிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை இப்பகுதியில் இவ்வாறு சட்டவிரோத கசிப்பு விற்பனை அதிகரித்துக் காணப்படுவதுடன் வீடுகளில் வாழ்வாதாரத் தேவைகளுக்கான வளர்க்கப்படும் கால்நடைகள் கடத்தப்படுவதுடன் திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.அத்துடன் கிராமத்தில் புதிய புதியவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதுடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வயது வந்த பெண் பிள்ளைகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.