Category:
Created:
Updated:
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, உறுதிமொழியை மீறும் விதத்தில் காங்கிரஸ் செயற்படாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சமூர்த்தி உதவி பெரும் 100 குடும்பங்களுக்கு அதிகரிக்கப்பட்ட சமூர்த்தி உதவி கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு 14.02.2022 அன்று ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் தலைமை தாங்கி நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் மக்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.