
முல்லைத்தீவு துணுக்காய் உயிலங்குளம் ஐம்பது வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றன என்றும் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிpன் கீழுள்ள உயிலங்குளம் கிராமத்pல் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட ஐம்பது வீட்டுத்திட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டு காலபகுதியில் காணிகளற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர் என 60 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.இதனைவிட தினமும் போக்கு வரத்துக்குப் பயன் படுத்தும் பிரதான வீதிமுதல் குடியிருப்பு வீதிகள் வரை எந்தவீதிகளும் புனரமைக்கப்படாமல் கானப்படுவதுடன் தண்ணீர்வசதி முன்பள்ளி வசதிகள் பாடசாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்மையால் இங்கு குடியிருந்த 60 குடும்பங்களில் 28 வரையான குடும்பங்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளன.அத்துடன் ஆரம்கத்தில் வழங்கப்பட்ட வீடுகள் சேதமடைந்து கானப்படுகின்றன இதளால் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு கடந்த ஆண்டுகளில் புதிய வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில் அவையும் முழுமைப்படுத்தப்படாத நிலையில் கானப்படுகின்றன. இந்த நிலையில் மேற்படி மாதிரிக் கிராமத்தின் அடிபபடை வசதி வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.