
உலக பரப்பில் இன்று பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சிகளை கண்டிருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்
இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் மகளிர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் (12-02-2022) கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றதுஇதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் உலக நாடுகளில் பெண்களின் வகிபாகங்கள் கூடியிருக்கின்றன.
உலக நாடுகளில் பெண்கள் பலர் தலைவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் தேர்தல் முறைகளில் கூட மாற்றங்கள் இடம்பெறலாம் வாய்ப்புகள் உண்டு. இந்த நாட்டில் மாறுகின்ற வாய்ப்புக்களை தான் அதிகமாக இருக்கின்றது; உலகப் பரப்பில் இன்று பெண்கள் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சியை கண்டுள்ளார்கள்.
உலக நாடுகளிலும் பெண்கள் பல தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது உள்ளுராட்சி மன்ற உறுப்பினராக செல்லம்மாள் என்ற பெண் தெரிவு செய்யப்பட்டு இருந்திருக்கின்றார் என்றும் அவருடைய பெயரிலேயே அவரது சொந்த காணியில் ஒரு பாடசாலை நிறுவப்பட்டு உள்ளது என்றும் அறிந்து கொண்டேன்.
பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள்ளும் பெண்கள் பணியாற்றுகிறார்கள் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பல துறை சார்ந்தவர்களாக போராளிகளாகக் கூட பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே அந்த அடிப்படையில் பெண்களின் வகிபாகம் என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது எனவே இந்த காலம் முக்கியமானது பல அரசியல் நெருக்கடிகளை நாங்கள் சந்தித்தாலும் எங்களுடைய இலக்கு நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.