Category:
Created:
Updated:
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது கூட்டத்தில் இன்று (11) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அரசு வழங்கும் எந்த வித வரிச்சலுகையும் நுகர்வோருக்கு கிடைப்பதில்லை என்பதும், அரசு நிவாரணத்தின் கீழ் பெறப்படும் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதும் இதன்போது தெரியவந்தது.