
1.7 மில்லியன் ரூபாய் செலவில் கிருஷ்ணாபுரம் அம்பாள் குளம் பிரதான இணைப்பு வீதியில் பாலம்.
கிருஷ்ணாபுரம் அம்பாள் குளம் பிரதான இணைப்பு வீதியின் பாலத்திற்கான அடிக்கல்லினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் நாட்டிவைத்தார்.குறித்த பாலமானது 1.7 மில்லியன் ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ளது.குறித்த நிகழ்வு இன்றைய தினம் (15.01.2022)அம்பாள் குளம் இளந்தென்றல் விளையாட்டு கழகத்தின் ஜனகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கயன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிவகுமாரன், கலைவாணி, மயில்வாகனம், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் இரத்தினமணி செயலாளர் கோணேஸ் மற்றும் அம்பாள்குளம், கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.