
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
நேற்று (13-01-2022) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த மாவட்டத்தில் பல வகையான விடயங்களுக்கு குறிப்பாக மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தல் அவற்றை முன்னேற்றுதல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் தற்போது கால போக நெற்செய்கை அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது அரசின் கொள்கைக்கு அமைவாக நாடு தழுவிய ரீதியில் குறித்தொதுக்கப்பட்ட நிதிக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு மாவட்ட ரீதியாக கள விஜயத்தை மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வனவள திணைக்களத்தினால் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் எல்லைக்கல் இடுதல் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது.