Category:
Created:
Updated:
கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தெஷார ஜயசிங்க பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.