
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகையில் மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் ரூ. 24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுய்களுடன் கூடிய பிரமாண்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பிரதமர் மோடி பேசியதாவது:-
தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழில் பேசி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும். அமெரிக்காவில் உலகத்தின் மிகப்பழமையான மொழியான தமிழில் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
நாடு முழுவதும் தற்போது 590 மருத்துவ கல்லூரிகள் உள்ளன; 22 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.
நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன. ஏற்கனவே 8 ஆயிரம் மக்கள் மருத்துவ மையங்கள் நாட்டில் உள்ளன.
ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதுவே முதல் முறை.
உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்ததே சாதனையாக இருந்தது.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.