
மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை
கடந்த 30 வருடம் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்தகலாச்சார பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
வடமாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியினை முதற்கட்டமாக 32 மாணவர்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ் மத்தியின் அன்னசத்திர பகுதியில் அமைந்துள்ள இந்து பௌத்த கலாச்சார பேரவையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்தனதேரர் கலந்துகொண்டு இரண்டு மொழிக்கற்கையின் சிங்கள பாடநெறியினை கற்ற மாணவர்களுக்கே இச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.