
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தி
கிளிநொச்சி மாவட்டத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் மேலதிகமான கள் வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் 174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபான பயன்பாடு என்பன தொடர்பில் பொலிஸார் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் மூலம் வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையிலே கிளிநொச்சி மாவட்டத்தில் மதுவரி திணைக்களத்தினால் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இதில் 37 வழக்குகள் மாத்திரம் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கசிப்பு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.ஏனைய வழக்குகள் மேலதிகமாக கள் வைத்திருந்தமை அனுமதிப் பத்திரங்கள் இன்றி கள் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரையான நாட்களில் குறித்த 174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.