Category:
Created:
Updated:
சிரியாவின் வடக்கே துருக்கி எல்லையில் அலிப்போ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் சில பகுதிகளை துருக்கி கைப்பற்றியுள்ளது. இப்பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த கிளர்ச்சியாளர்களை துருக்கி பயங்கரவாத இயக்கமாக கருத்துகிறது. இதனால், குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு கிளர்ச்சியாளர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அலிப்போ மாகாணத்தின் அஃப்ரின் மாவட்டத்தில் இன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.