












நாட்டை திறப்பது குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்ட பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையை பராமரித்துச் செல்லும் முறையை தயாரிப்பதற்காக கொவிட் செயலணியினால் குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
இந்நாட்டு மக்கள் தொகையில் 52.3 சதவீதமானோருக்கு தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.