Category:
Created:
Updated:
ராஜகிரிய பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று முன்திம் (25) அதிகாலை 3.00 மணிக்கு பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹேவாசத்தகே விஜித குமார என்ற ´ஜின்ட் ரன்ஜி´ என்ற நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரிய பிரதேசத்தின் வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரை நுகேகொடை பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் (26) கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேக நபர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இதற்கு முன் அதுருகிரிய பகுதியில் பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து தங்க நகையை கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.