கிழக்கில் குறைந்து வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் மிகக் குறைந்த கொவிட் 19 தொற்றாளர்களாக 595 நபர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் 21 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இது வரை 1,618,699 கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. முதலாவது தடுப்பூசி 874,447 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 744,252 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
20 தொடக்கம் 29 வயதுக்கு உட்டவர்களுக்கு 284,990 பேருக்கும், 30 தொடக்கம் 59 வயதுக்குட்டவர்களுக்கு 629,933 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 138,417 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் குறிப்பிட்டுள்ளார்.