சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  7499 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடுத்த மோடி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

 

நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.

அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்பட அதிகார வர்க்கத்தினர் வரவேற்றனர்.

 

மோடி அங்கு சென்று இறங்கியபோது மழைச்சாரல் வீசிக்கொண்டிருந்தது. அதற்கு மத்தியிலும் மூவர்ணக்கொடியை ஏந்திக்கொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.  பிரதமர் மோடியுடன் கை குலுக்க அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கைகளை நீட்டினர். மோடி அவர்கள் அருகில் சென்று கை குலுக்கியதுடன், படமும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார்.  அமெரிக்காவை சேர்ந்த ஐந்து உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அடோப் நிறுவன தலைவர் சாந்தனு நாராயன், ஜெனரல் ஆட்டோமிக்ஸ் நிறுவன தலைவர் விவேக் லால், குவால்கம் தலைவர் கிறிஸ்டியானோ அமோன், பர்ஸ்ட் சோலார் தலைவர் மார்க் விட்மர், பிளாக்ஸ்டோன்  தலைவர் சூவர்ஸ்மான் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

 

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார். அப்போது பேசிய மோடி, சிறப்பான வரவேற்பளித்ததற்கு கமலாஹாரிசுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா இரண்டாவது அலையின் துவக்கத்தில் இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு நன்றி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

 

அமெரிக்க அதிபர் பைடன்-கமலா ஹாரிசின் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் இந்தியா வரவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிகமுக்கிய பங்காளராக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். 

 

கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றியதாக கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவது வியப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்பில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

 

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குவாட் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

  • 597
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads