சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பால்மாவுக்கான விலை அதிகரிக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் ராஜாங்க குறிப்பிட்டுள்ளார்.உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடந்த ஒரு மாதகாலமாக கோரி வருகின்றன.விலை அதிகரிக்க அனுமதிக்கப்படாதமையால் அவர்கள் தற்போது இறக்குமதியை மட்டுப்படுத்தி இருக்கின்றனர். அதனால் சந்தையில் கடந்த சில வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.இந்த பின்னணியில் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பது, கப்பல் கட்டணம் அதிகரித்திருப்பது, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது போன்ற காரணங்களுக்கமைய ஒரு கிலோ கிராம் பால்வின் விலையை 350 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.என்றாலும் சந்தை நிலைமை மற்றும் இறக்குமதி வரி தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளது.இருந்தபோதும் பால்மாவுக்கான விலை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை. எதிர்வரும் வாரத்தில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னரே விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  • 515
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads