Ads
டெல்லியில் இன்று மேலும் 28 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று
டெல்லியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,38,497 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.04 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,085 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14,13,025 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் தற்போது 387 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads