Ads
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 36பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,604பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 38ஆயிரத்து 093பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 170பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 39ஆயிரத்து 198பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 71ஆயிரத்து 725பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Info
Ads
Latest News
Ads