Category:
Created:
Updated:
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் நீருடன் சேர்ந்ததினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்று முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சக்தி வலு அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.