தனக்கு ஜோடியாக ராஷிகண்ணாதான் வேண்டும் என்ற விஜய் சேதுபதி
முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அவரை ரசிக்கும் ரசிகர்கள் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை ரசிக்கிறார்கள் என்றால் கேள்விக்குறிதான்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளியான படங்கள் ஒரு தடவை கூட பார்க்க முடியாது என்ற சோதனையான நிலைமைக்குத் தள்ளப்பட்டது. இதை உணர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனருடன் இணைய ஆர்வமாக இருக்கும் விஜய் சேதுபதி, இடையில் மற்ற மொழிகளில் வரும் வாய்ப்பையும் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ஹிந்தியில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசிகன்னா நடிக்கிறார். அவரை நடிக்க வைக்க விஜய் சேதுபதி தான் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ராசிகன்னா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் துக்ளக் தர்பார், சங்கதமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி தரப்பிலிருந்து அவருக்கு சிபாரிசு செய்யவில்லை எனவும் இயக்குனரின் தேர்வு ராசி கண்ணாதான் என கூறுகின்றனர். எது எப்படியோ வெப்சீரிஸ் ரிலீசானால் இன்னமும் பிரபல நடிகராக மாறி விடுவார் விஜய் சேதுபதி. சும்மாவே மனுஷன் சம்பளத்தில் உச்சத்தில் இருக்கிறார், இன்னும் வெப்சீரிஸ் வெளியாகி புகழ் பெற்று விட்டால் அவரின் சம்பளம் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லையாம்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva