மீண்டும் முதலிடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா
சின்னத்திரை ரசிகர்கள் விஜய் டிவியின் சீரியல்களை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதுமே முதலிடத்தை பிடிக்கும் பாரதிகண்ணம்மா கடந்த சில வாரங்களாக பின்னுக்குத் தள்ளப்பட்டது.
சீரியலின் கதாநாயகி கண்ணம்மா விலகியது இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. பாரதிகண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா தேவியின் நடிப்பு தத்துரூபமாக இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளினர்.
அதன் பிறகு தற்போது நடிக்கும் புதிய கண்ணம்மாவை, ரசிகர்கள் தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும் மெல்ல மெல்ல ரசிக்கத் தொடங்கி விட்டனர். அதனால் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பாரதிகண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி பெற்றுள்ளது. இந்த சீரியலில் எழில் மற்றும் அமிர்தா இருவருக்கும் இடையே நடைபெறும் காதல் காட்சிகளும், அமிர்தாவிற்கு குழந்தை இருந்தாலும் தன்னுடைய காதலை மாற்றிக் கொள்ளாமல் எழில் அமிர்தாவிடம் காதலை சொன்ன் பரபரப்பான காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மூன்றாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக பாரதிகண்ணம்மா சீரியல் பின்னுக்குத்தள்ளி பாண்டியன் ஸ்டோர் சீரியல் டாப் இடத்தை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த சீரியல்களை தொடர்ந்து ராஜா ராணி2, தமிழும் சரஸ்வதியும், மௌன ராகம், பிக்பாஸ் சீசன்5, நாம் இருவர் நமக்கு இருவர், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னைத் தொடும் போன்ற தொடர்கள் அடுத்தடுத்த டிஆர்பி ரேட்டிங்கை பிடித்துள்ளது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva