
'பொம்மை நாயகி' படத்தின் புதிய அப்டேட்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குநர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'பொம்மை நாயகி' படத்தின் முதல் பாடலான 'அடியே ராசாத்தி' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் 2வது பாடல், ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























