பிறந்தநாளன்று விஜய் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு
விஜய் பிறந்தநாளான இன்று வெளியே வந்து ரசிகர்களை காண வேண்டும் என விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக உள்ள நடிகர் விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வழக்கமாக தனது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் விஜய் கொரோனா தொற்று தமிழகத்தில் பரவலாக இருப்பதால் தவிர்த்து வருகிறார்.
கொரோனா இரண்டாவது அலையால் தமிழகம் ஸ்தம்பித்திருந்தது. இந்த நிலையில் கொண்டாட்டங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம் என விஜய் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டது.
ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நடிகர் விஜய்யின் பிறந்தநாளை பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வேண்டும் என அவரது வீட்டிற்கு வெளியில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியே வந்து தங்களை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் தனது ரசிகர்களை பார்த்து கையசைப்பதும், நலம் விசாரிப்பதும் நினைவுகூரத்தக்கது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva